Recent Post

முதல்முறையாக டேப்லெட் களத்தில் இறங்கும் லெனோவா!


இதுவரை கணினி மற்றும் லேப்டாப்புகளை தயாரித்து வந்த லெனோவா நிறுவனம் தற்போது முதன் முதலாக டேப்லெட் ஆடுகளத்தில் குதிக்க இருக்கிறது. அதாவது லெனோவா ஐடியாடேப் எஸ்2109 என்ற ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது.
இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும். இது 9.7 இன்ச் அளவில் வருகிறது. மேலும் டிஐ ஒஎம்பிஎபி 4430 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதனால் இது வேகமாக இயங்கும் சக்தி கொண்டது.
இந்த டேப்லெட்டின் ஐபிஎஸ் எல்சிடி திரை மிகவும் துல்லியமாக இருக்கும். குறிப்பாக வீடியோக்கள் பார்ப்பது மற்றும் விளையாட்டுகள் விளையாடுவது போன்றவற்றிற்கு இந்த திரை மிகவும் வசதியாக இருக்கும்.
இந்த டேப்லெட்டின் இடது உச்சியில் 1.3எம்பி முகப்பு கேமரா உள்ளது. இதன் மூலம் தடையில்லா வீடியோ உரையாடலை நடத்தலாம். மேலும் இந்த டேப்லெட்டில் மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவை உள்ளதால் தகவல் பரிமாற்றத்தையும் இதில் எளிதாக மேற்கொள்ள முடியும்.
இதில் இருக்கும் எஸ்ஆர்எஸ் சரவுண்ட் சவுண்ட் ஸ்பீக்கர்கள் மூலம் சூப்பராக பாடல்களைக் கேட்கலாம். ஆன்ட்ராய்டு 4.0 ஐதிஎஸ் இயங்கு தளத்தில் இந்த டேப்லெட் இயங்குவதால் ஆன்ட்ராய்டு ஸ்டோரிலிருந்து எளிதாக அப்ளிகேசன்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் இந்த டேப்லெட் அக்குவெதர் எவர்நோட், அடோப் ப்ளாஷ் ப்ளேயர், கோ கீபோர்டு, ஆப் ஷாப், டாக்குமென்ட்ஸ் டூ கோ, மூவி ஸ்டூடியோ, பிரிண்டர்ஷேர், ஸ்கைப், நியூஸ் ரிபப்ளிக், நார்ட்டன் செக்யூரிட்டி, லெனோவா பீப்பிள் ஹப், யூடியூப், சுகர்சின்க், வாய்ஸ்நோட் மற்றும் சினியோ போன்ற எண்ணற்ற அப்ளிகேசன்களை தனக்குள் வைத்திருக்கிறது.
இந்த லெனோவா டேப்லெட் 7 மணி நேர இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.18,000 ஆகும். இந்த புதிய லெனோவா டேப்லெட் சாதிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மலிவு விலையில் பொழுதுபோக்கு வசதிகளுடன் புதிய டேப்லெட்!


சென் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு சென் மொபைல் அல்ட்ராபுக் எ100 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது.
குறிப்பாக இந்த சென் டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் மாலி 400 ஜிபியுவைக் கொண்டிருக்கிறது. அதுபோல் உயர்ந்த ரிசலூசனுடன் கூடிய 7 இன்ச் திரையை இந்த டேப்லெட் வழங்குகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மிக அதிகமான பொழுதுபோக்கு அம்சங்களைத் தாங்கி வருகிறது.
மேலும் தரமான ரேம் மற்றும் சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்கும் வசதி ஆகியவற்றுடன் இந்த டேப்லெட் களமிறங்குகிறது. இந்த சென் டேப்லெட் லைவ் பேனல் மெனு என்ற தொழில் நுட்பத்தைக் கொண்டிருப்பதால் படங்களுக்கு ஏற்றவாறு இதன் டிஸ்ப்ளேயை மாற்றிக் கொள்ளலாம். அதோடு மேலும் பல புதிய அப்ளிகேசன்களையும் இந்த டேப்லெட் தாங்கி வருகிறது.

பொழுதுபோக்கிற்காக இந்த டேப்லெட் ரீடரஸ் ஹப் மற்றும் மியூசிக் ஹப் போன்ற பல அப்ளிகேசன்களைக் கொண்டு வருகிறது. அதன் மூலம் பல மொழிகளில் உள்ள இ-நியூஸ் பேப்பர்ஸ், இ-புக்ஸ், இ-மேக்கசின்ஸ் மற்றும் லட்சக்கணக்கான பாடல்கள் போன்றவைற்றை இந்த டேப்லெட்டில் அனுபவிக்கலாம்.
மேலும் இந்த சென் கேமராவில் 1.3எம்பி முகப்புக் கேமரா உள்ளதால் வீடியோ உரையாடலைத் தடங்கலின்றி நடத்தலாம். அதோடு இதன் பேட்டரி இந்த டேப்லெட்டிற்கு 14 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.
மேற்சொன்ன எல்லா அம்சங்களையும் இந்த சென் டேப்லெட் வழங்கினாலும் இது மிகவும் குறைவான விலைக்கே விற்கப்படுகிறது. அதாவது இந்த டேப்லெட்டை ரூ.6,000க்கு வாங்கலாம்

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி with கூகிள் ஆட்சென்ஸ்

இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் விளம்பரங்களில் சொல்வது போல், நீங்கள் உங்களுக்கு வரும் மின்னஞ்சலைப் படிப்பதன் மூலமாகவோ, மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ, விளம்பரங்களைச் சொடுக்குவதன் மூலமாகவோ சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்போவதில்லை. இங்கு நாம் பார்க்கப்போகும் வழிமுறைகள் உண்மையாகவே நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கக் கூடிய வழிகள். நியாயமான வருமானத்தை இணையத்தைப் பயன்படுத்திப் பெறுவது எப்படி என்றுதான் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

முதலில் நாம் பார்க்கப்போவது 'Google Adsense'. இணைத்தளங்கள் வைத்திருக்கும் யாராயிருந்தாலும், தமது தளங்களில் கூகிளுடைய விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி இது. கூகிள் விளம்பரங்களை அந்தத் தளங்களில் வெளியிடும் அதே நேரத்தில், உங்கள் தளத்திற்கு வருபவர்கள் தங்களுக்குத் தேவையான தேடுதல்களை மேற்கொள்ளவும் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) வழி செய்கிறது.

உங்கள் தளம் எதைக்குறித்தது, அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் எத்தகையவை, இவற்றின் அடிப்படையில், உங்கள் தளத்தைப் பார்வையிடுபவர் அதில் உள்ள கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களைச் சொடுக்குகையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்றால் என்ன? அது ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்? 

உலகமுழுவதும் உள்ள பல நிறுவனங்கள், கூகிள் தங்களைப்பற்றிய விளம்பரங்களை வெளியிடப் பணம் கொடுக்கின்றன. இது 'கூகிள் ஆட்வேர்ட்ஸ்' (Google Adwords) எனப்படுகிறது. கூகிளில் நீங்கள் எதையாவது தேடுகையில் உங்கள் வலப்புறத்தில் நீங்கள் பார்ப்பது இந்த ஆட்வேர்ட்ஸ்தான். இந்த ஆட்வேர்ட்ஸ் (Google Adwords) விளம்பரங்கள், இணையத்தைப் பயன்படுத்துவோரால் சொடுக்கப்படுகையில், கூகிளுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த விளம்பரங்களை, உங்கள் தளத்திலும் வெளியிடுவதன் மூலம், கூகிளுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கிறது. அதில் ஒரு பகுதி, உங்களுக்கு (அதாவது இணைத்தளத்தின் உரிமையாளர்களுக்கு) பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கூகிள் ஆட்சென்ஸில் (Google Adsense) உறுப்பினராவது எப்படி?

உங்களுக்கென்று ஒரு இணைத்தளம் மட்டும் இருந்தால் போதும். கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிடுவது இலவசம்தான். இதற்காக கூகிள் நிறுவனத்திற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகளின் படி உங்களது இணைத்தளமானது இருக்கவேண்டும். தகுதி அளவீடுகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இவை இரண்டும் இருப்பின் நீங்கள் உங்கள் இணைத்தளத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிட விண்ணப்பிக்கலாம். அந்நிறுவனம், உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என முடிவு செய்யும். நீங்கள் விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள் அனேகமாக, உங்கள் விண்ணப்பம் ஏற்கவோ, நிராகரிக்கவோ படலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படின், நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் தொடங்கலாம். பின்னர், உங்களுக்கு ஒரு 'HTML Code' வழங்கப்படும். அக்குறியீட்டு எண்ணை, உங்களது தளங்களில் நீங்கள் பயன்படுத்தினால், கூகிள் தன்னிடம் உள்ள சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் தளத்தின் தலைப்பு, அதன் உள்ளடக்கம் இவற்றுக்குத் தொடர்புடைய விளம்பரங்களை உங்கள் தளத்தில் காட்சிப்படுத்தும். ஒரு சொடுக்கலுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கூகிளுக்கு மட்டுமே தெரிந்த இரசியம். அது ஒரு சென்ட் ஆகவும் இருக்கலாம், பத்து டாலராகவும் இருக்கலாம்.

கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகள் என்னென்ன?

1. உங்களுக்கு என்று ஒரு இணைத்தளமோ (Website), வலைப்பூவோ (Blogspot) இருக்கவேண்டும். இது வரை இல்லையென்றால் இனிமேல் நீங்கள் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். (ஆனால், சில நேரங்களில் உங்கள் இணைத்தளம் அல்லது வலைப்பூ உருவாகி ஆறுமாதமாவது ஆனால்தான்,கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்க முடியும். குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தளங்கள்.)
2. உங்கள் வயது பதினெட்டுக்கு மேற்பட்டிருக்கவேண்டும்.
3. கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனத்தின் சில நெறிமுறைகளை மீறாமல் இருக்கவேண்டும். (இவற்றை விரிவாகப் பின்னர் காணலாம்.)

உங்கள் கணக்கைத் துவக்குவது எப்படி?

முதலில் கூகிள் ஆட்சென்ஸுக்கு நீங்கள் உறுப்பினராவதற்காக விண்ணப்பிக்கவேண்டும். உங்கள் முழுப்பெயர் (உங்கள் சான்றிதழ்களில், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ளபடி), உங்கள் முழு முகவரி, உங்கள் இணைத்தளத்தின் முகவரி (URL), இவை அனைத்தையும் கொடுக்கவேண்டியிருக்கும். கூகிளின் விதிமுறைகளை மீறமாட்டேன் என்ற உறுதிமொழி கொடுக்கவேண்டும். உங்கள் தளம் கூகிளின் நெறிமுறைகளை மீறாமல் இருப்பின், உங்களுக்கு முன்னால் கூறியபடி ஒர் எண் கொடுக்கப்படும். உங்கள் தளத்துக்கு வருபவர்கள் மட்டுமே விளம்பரங்களைச் சொடுக்கவேண்டும். நீங்களே உங்கள் விளம்பரங்களைச் சொடுக்கினால் அது விதிமுறை மீறல். அப்படிச் செய்பவர்களின் கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடும்.

உங்கள் கணக்கில் பத்து டாலர்கள் சேர்ந்தபின், உங்கள் முகவரியைச் சரிபார்க்கும் விதமாக, கூகிள் உங்களுக்கு PIN எண்ணை தபால் மூலமாக அனுப்பும். அந்த எண்ணை நீங்கள் உங்கள் கணக்கில் பதிவு செய்தல் மூலம் உங்களுடைய முகவரி சரிபார்க்கப்படுகிறது. கூகிளில் இருந்து நீங்கள் பணப்பட்டுவாடா ஆக இது அவசியம்.

ஒவ்வொரு முறையும் உங்கள் கூகிள் கணக்கில் குறைந்தபட்சமாக 100 டாலர்கள் சேர்ந்தபின், உங்களுக்கு 'கூகிள் நிறுவனத்தில் இருந்து காசோலை அனுப்பப்படும். ஆனால் உடனடியாக அல்ல. உங்கள் கணக்கில் மார்ச் மாதம் 20ம் நாள் இருப்புத்தொகை நூறு டாலர்களைத் தாண்டினால், அது பரிசீலிக்கப்பட்டு, (விதிமுறை மீறல்கள் உள்ளதா இல்லையா என்று), ஏப்ரல் மாதம் கடைசியில் உங்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படும். உங்கள் பணம் கைக்கு வர மே மாதம் 10 முதல் 15 தேதி ஆகிவிடக்கூடும். நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்குகையில் கொடுத்த முகவரிக்குக் காசோலை அனுப்பப் படும்.

கூகிள் ஆட்சென்ஸ் விதிமுறைகள் என்னென்ன?

உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை நீங்களே சொடுக்குதல் கூடாது. அதே போல், நீங்களே உங்கள் தளத்திற்கு வருபவர்களை, விளம்பரங்களைச் சொடுக்குமாறு கூறுதல், உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் விளம்பரங்களைச் சொடுக்கச் செய்தல் இவையும் நெறிமுறைகளுக்குப் புறம்பானவை. உங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கும், விளம்பரங்களைச் சொடுக்குபவர்களுக்கும் சரியீடு செய்தல், விளம்பரங்களுக்குப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, விளம்பரங்களைச் சொடுக்க வகை செய்தல் இவையும் நெறி முறைகளை மீறியவையே! இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுடைய கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடக்கூடும். உங்கள் தளம் ஆபாசம், வன்முறை, இன,மொழி, நிற வெறிகளைத் தூண்டுவதாக இருப்பின், உங்கள் தளத்தை கூகிள் ஆட்சென்சுக்குப் பயன்படுத்த முடியாது.

ஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் இணையதளங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்கும்.

பல படங்களின் அளவுகளை ஒரே நேரத்தில் மாற்றலாம்


புகைபடங்கள் பலவற்றின் அளவுகளை ஒரே நேரத்தில் மற்றியமைபதற்கு பல்வேறு மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் Lightning Image Resizer எனும் மென்பொருளானது இலவசமாகக் கிடைபதுடன், மிக விரைவில் படங்களின் அளவுகளை விரும்பியவாறு மாற்றியமைக்கும்  வசதிகளையும் கொண்டுள்ளது.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tech தமிழ் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger